சும்மா கிழி பாடலுக்காக வெயிட்டிங்கில் இருக்கும் ரஜினி ரசிகர்கள்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகார்யாக நடித்துள்ள தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள சும்மா கிழி பாடலுக்காக அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன் தாரா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். வரும் 2020 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், தர்பார் படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடி அசத்தியுள்ளாராம். சும்மா கிழி என்ற பாடலுக்காக ரஜினிகாந்த் மட்டுமல்ல அவரது தீவிர ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.



ரஜினியின் அறிமுக பாடலை யார் பாடுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு படத்தில் ரஜினியின் அறிமுக காட்சி எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அவரது எண்ட்ரி சாங்கும் அப்படித்தான். இதற்கு முன்னதாக வந்த அண்ணாமலை, படையப்பா, பாட்ஷா ஆகிய படங்களில் ரஜினியின் எண்ட்ரி சாங் சும்மா மாஸாகவே இருந்தது. இந்த படங்களில் எஸ்பிபி பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களுக்கு விருந்துதான்.